அஜித்தை வெளிப்படையாக திட்டிய ரசிகர்! கோபத்தின் பின்னணி இதுதானாம்

அஜித் நல்ல மனம் கொண்டவர், உதவி செய்யக்கூடியவர் என பலரும் சொல்வதுண்டு. அவர் செய்யும் சில நல்ல விசயங்கள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது என அண்மையில் மைம் கோபி கூட கூறியிருந்தார்.

இன்று நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் பங்கேற்றனர்.

விஜய், சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் நடிகைகள் சிலரும் கலந்துகொண்டனர். ஆனால் அஜித் வருவார் என மிகவும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

பொது விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் இதுபோன்ற நல்ல விசயங்களுக்கு போரட்டங்கள் நடைபெற்ற போது முன்பெல்லாம் கலந்துகொண்டார். ஆனால் தற்போது அவர் வராதது எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் கோபமான ரசிகர் ஒருவர், தமிழர்களுக்காக அவர் வரமுடியாமல் போய்விட்டதா? திருவான்மியூர் வீட்டிலிருந்து போராட்டம் நடக்கும் இடத்திற்கு 12 கிமீ அவரால் பயணம் செய்யமுடியாதா? அவர் வீட்டை விட்டு வரவேமாட்டாரா என கேள்வி கேட்டு டிவிட்டரில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

400 எண் கொண்ட ஜெர்சி எதற்காக? ரகசியம் உடைத்த பிராவோ

சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை.