மும்பையின் ஐபில் களத்தை போராட்ட களமாக மாற்றிய வீர தமிழின்!
11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமான போட்டி மே மாதம் 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று ஆரம்பமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியும் பெற்றது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்,ஸ்டெர்லிட் ஆலை ஆகிய விஷயங்களுக்காக தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில்,தமிழக அமைச்சர்கள், பிரபலங்கள் முதல் மக்கள் அனைவரும் சென்னையில் ஐபில்போட்டிகள் நடக்க கூடாது எனவும்,நடந்தால் புறக்கணிக்க வேண்டும் எனவும், போட்டி நடக்கும் மைதானத்தில் போராட்ட.பதாகைகள் தாங்கி உலகத்தின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்ப வேண்டும் எனவும் பலவாறாக கருது தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் இன்று போட்டி நடக்கும் வேலையில்,மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையினை தாங்கி அழுத்தமாக தனது எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்.

Comments
Post a Comment